Friday, June 11, 2021

திருவள்ளுவரின் திருக்குறள் 70 - மகன் தந்தைக்கு ...


 
திருக்குறள் : அறத்துப்பால்

அதிகாரம் :  மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்

திருவள்ளுவரின்  குறள் 70


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல். 

இக்குறளின் விளக்கம் தெரிவதற்கு முன் நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது  “கொல் “ என்ற சொல்லைப்பற்றி தான். கொல் என்ற சொல் இங்கு ”ஐயம்” என்பதை குறிக்கிறது. ஐயம் என்றால் சந்தேகம், உதாரணமாக இப்படி செய்யலாமா அல்லது அப்படி செய்யலாமா ? என்பது தான். ஒருவருக்கு இது கல்வியில் வரலாம், ஞானத்தை தேடும்போது வரலாம், பொருள் தேடும்போது வரலாம்.  இப்படி எதில் வேண்டுமானாலும் ஐயம் என்று சொல்லக்கூடிய சந்தேகம் வந்தாலும் அதை நீக்கக்கூடிய ஒரு மகனைத் தான் இக்குறள் சொல்கிறது.   ஒரு மகன் தந்தைக்கு செய்யும் உதவி என்னவென்றால் ஐயம் தீர்க்கக்கூடிய ஒரு மகனை பிள்ளையாக பெற்றதற்கு இவன் தந்தை என்ன” தவம் செய்தாரோ ”என்று அனைவரும் சொல்லும் சொல்லே ஆகும்.

Gkural யூடியுப் சேனலின் உலகப்பொதுமறை விளக்க பணியில் திருவடி சரணம் ஐயாவுடன் , குரல் - உங்கள் சுபாஷ் சந்தர். நன்றி வணக்கம். 

Narration: Subhash Chander,

Website: http://voiceoversubhash.com  

Email: voiceoversubhash@gmail.com

Share:

திருவள்ளுவரின் திருக்குறள் 7 - தனக்குவமை இல்லாதான்...


 திருக்குறள் : அறத்துப்பால்

அதிகாரம் : கடவுள் வாழ்த்து 

 திருவள்ளுவரின் குறள் 7 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

நம்மைப் போலவே சிந்திக்கும் ஒருவரால் நம் மனக்கவலையை மாற்ற முடியாது. பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்திலும் கடவுளைக் காணும் அன்பு உள்ளவர்களிடம் சேர்ந்து, அவர் பாதம் பணிந்தால் மட்டுமே நம் மனக்கவலையை மாற்ற முடியும்.    எல்லா உயிர்களிடத்திலும் கடவுளை காண்பவனுக்கு கவலை என்பது வருவதே இல்லை. இதனாலே இவன் நமக்கு நிகரில்லாதவனாகவும், நம்மைவிட மேலான வனாகவும் , நம் கவலைகளை நீக்குபவனாகவும் இருக்கிறான்.

Gkural யூடியுப் சேனலின் உலகப்பொதுமறை விளக்க பணியில் திருவடி சரணம் ஐயாவுடன் , குரல் - உங்கள் சுபாஷ் சந்தர். நன்றி வணக்கம். 

Narration: Subhash Chander,

Website: http://voiceoversubhash.com  

Email: voiceoversubhash@gmail.com


Share:

அதிகம் வாசிக்கப்பட்டவை

பதிவுகள்